பாகிஸ்தானில் இதுவரை 450பேர் மரணம்!

You are currently viewing பாகிஸ்தானில் இதுவரை 450பேர் மரணம்!

பாகிஸ்தானின் கராச்சியில் மர்மமான முறையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களின் உடல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் தற்போது குழப்பம் நிலவுகிறது. இதனால், கராச்சியில் உச்சக்கட்ட உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் நலன்புரி அமைப்பான சிப்பா நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், இறந்த 22 பேரின் அடையாளத்தை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், செவ்வாய்கிழமை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து பேரில் மூவர் போதைக்கு அடிமையானவர்கள் என அறியப்பட்டதாக அந்த அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

22 பேரின் உடல்களை உறவினர்கள் யாரும் பெற்றுக் கொள்ள வராததால் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது.

மறுபுறம் கராச்சியில் வெயில் சுட்டெரித்ததால் பலர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தினால் பல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் உள்ள மற்றொரு மனிதாபிமான உதவி அமைப்பான எதி அறக்கட்டளையைச் சேர்ந்த அசிம் கான், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்று கூறினார்.

அவர்கள் போதையில் இருந்த போது கடும் வெப்பம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை

வெப்ப அலை தாக்கியதில் பாகிஸ்தானின்(Pakistan) மிகப்பெரிய நகரமான கராச்சியில்(Karachi)  நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வரும் நிலையில் கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.

கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக அந்நாட்டிலுள்ள அறக்கட்டளையொன்று தெரிவித்துள்ளது.

குறித்த அறக்கட்டளையானது, பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.

இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி தெரிவிக்கையில், ” கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன.

மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.

பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.

இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply