பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் லாரியில் சென்று கொண்டிருந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வரும் மக்கள் நிறைந்த மாகாணமாக பலுசிஸ்தான் இருந்து வருகிறது. அங்கிருக்கும் ஹர்ணி பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் பணியாற்றுவதற்காக, லாரியில் சுரங்கத் தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டது
அப்போது, லாரியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேவேளையில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என்று அந்த மாகாணத்தின் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.