பாகிஸ்தான் வாடகை வண்டி ஓட்டுநர்கள் : ஸ்பெயினின் சுகாதார ஊழியர்களுக்கு இலவச சவாரி!

  • Post author:
You are currently viewing பாகிஸ்தான் வாடகை வண்டி ஓட்டுநர்கள் : ஸ்பெயினின் சுகாதார ஊழியர்களுக்கு இலவச சவாரி!

பார்சிலோனாவிலுள்ள பாகிஸ்தான் மக்கள் வீடற்றவர்களுக்கும், உதவி தேவைப்படும் மக்களுக்கும் உணவுப் பொட்டலங்களை வழங்குவதோடு, பாதுகாப்பு கருவிகளையும் தயாரித்து வருகின்றனர்.

வாடகை வண்டி ஓட்டுநரான ஷெராஸ் சையத் (Sheraz Syed) கூறும்போது “இந்த நாட்களில் வண்டி ஓட்டுநராக இருப்பது அதிக ஆபத்துள்ள வேலை. ஆனால், பார்சிலோனாவில் உள்ள 195 பாகிஸ்தானியர்களுடன் சேர்ந்து, வழக்கமான பணிகளுக்கு மேல், நகரத்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு இலவச சவாரிகளை வழங்கி வருகின்றோம்” என்றார்.

பாகிஸ்தான் வாடகை வண்டி ஓட்டுநர்கள் : ஸ்பெயினின் சுகாதார ஊழியர்களுக்கு இலவச சவாரி! 1

மார்ச் நடுப்பகுதியில், ஸ்பெயினின் lockdown தொடக்கத்தில், Shahbaz Ahmed தலைமையிலான ஆறு பாகிஸ்தான் வாடகை வண்டி ஓட்டுநர்கள், மருத்துவத் தொழிலாளர்கள் இரவில் தங்கள் வீடுகளுக்கு எவ்வாறு திரும்புவது என்பது பற்றி விவாதித்தனர்.

அப்போதிருந்து, அவர்களின் முயற்சி சுமார் 200 தன்னார்வலர்களாக விரிவடைந்துள்ளது. இதில் பிற நாடுகளைச் சேர்ந்த சில ஓட்டுநர்களும் உள்ளனர்.

அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களை மருத்துவமனைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், நகரமையத்தையும், Can Ruti மருத்துவமனை போன்ற தொலைதூர வசதிகளையும் உள்ளடக்கும் வகையில் தங்கள் அட்டவணையை ஏற்பாடு செய்தனர்.

“மருத்துவ ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள், அவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி தங்கள் வேலைகளுக்குச் செல்வதை நாங்கள் காண்கின்றோம்” என்று Asim Gondal கூறினார்.

“இந்த காரணத்திற்காக, அவர்கள் மனிதநேயத்திற்காக பணியாற்றி வருவதால், அவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்குடனும் நாங்கள் இந்த சேவையைத் தொடங்கினோம்”, என்று அவர் மேலும் கூறினார்.

மேலதிக தகவல்: Aljazeera

பகிர்ந்துகொள்ள