பாகிஸ்தானில் பலூசிஸ்தான் கிளர்ச்சிப்படை, தெக்ரிக் ஐ தலிபான் பாகிஸ்தான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் , பாதுகாப்புப்படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணங்கத்தில் கரக், வடக்கு வசிர்ஸ்தான் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதிகளுக்கு விரைந்து சென்ற பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரின்போது பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.