பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா !

You are currently viewing பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா !

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

குறித்த சாதனையை  நேற்று  அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் முடித்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா நிறைவு செய்துள்ளார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச்சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.

மேலும் திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments