பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் – ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலி.

  • Post author:
You are currently viewing பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் – ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலி.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.  இது தொடர்பாக ராணுவம் தரப்பில், “பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது 3 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் ராணுவ உயர் அதிகாரிகள் உள்பட 8 பேர் பலியாகினர்.
 விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின.  ஏவுகணைகள் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் விழுந்து வெடித்தன” என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த தாக்குதல் யாரால் நிகழ்த்தப்பட்டது, யாரை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை என்று ஈரான் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
கடந்த வாரம்,  ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்நாட்டு தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தின் போது   அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.
தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்  தெரிவித்து இருந்தார்.  இத்தகைய சூழலில், ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக முதற்கட்டமாக உள்ளூர் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள