அவர் தமிழீழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.
அதுவும் இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக அவர் பாடினார்.
‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ தொடங்கி, இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக
‘வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு
கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ – கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ
இங்கு குயிலினம் பாட மறந்தது
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது.
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை
உங்களின் ராணுவம் செய்து முடிக்குது.’ பாடலைப் பாடினார்.
இது இரண்டாயிரத்தின் இறுதிகளில் வெளியான தவிபு களின் ‘பாசறைப் பாடல்கள்’ இறுவட்டு வரை தொடர்ந்தது.
தமிழீழ வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை தமிழீழம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறும்.