பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்!

You are currently viewing பாடசாலை ஆரம்பித்தல் தொடர்பான விரிவான வழிகாட்டல்!
  1. மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப் பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
  2. பாடசாலைக்கு வரும்போது, பாடசாலையினுள் மற்றும் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வரை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்தல்.
  3. பாடசாலையினுள் நுழையும் போது உடல் வெப்பநிலையை பரிசீலித்தல் கட்டாயம்.
  4. பாடசாலையினுள் நுழையும் போது கை கழுவுதல் மற்றும் காலணிகள் தொற்று நீக்கம் செய்யப்படல் வேண்டும்.
  5. மாணவர்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வதை குறைப்பதற்காக பாடசாலையில் காணப்படும் மேலதிக நுழைவாயில்களை திறந்து பயன்படுத்தல்.
  6. ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு பாதுகாப்புக் கவச ஆடை மற்றும் முகக்கவசம் (Face Shield) இருத்தல் வேண்டும். பாடசாலையில் கோவிட் அடையாளத்தில் மாணவர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி ஆடைகளை அணிந்து கொண்ட பாடசாலை ஊழியர் அம்மாணவரை பாடசாலை ஓய்வு அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
  7. பாடசாலை நடைபெறும் சந்தர்ப்பங்களில் வெளிநபர்களின் வருகையை முடிந்தளவு தவிர்த்தல்.
  8. விசேட சந்தர்ப்பங்களில் 1390 க்கு அழைப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளல்.

பாடசாலை வகுப்புகள் நடைபெறும் விதம்

ஒரு வகுப்பில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை

• 15 வரை எனின் அனைத்து நாட்களும் வகுப்புகள் நடைபெறும்.

• 16 – 30 எனின், இரண்டாக பிரித்து ஒரு வாரம் விட்டு மறுவாரம் வருமாறு இரண்டு பிரிவுகளுக்கும் மாறி மாறி வகுப்புகள் நடைபெறும்.

• 30க்கு மேல் எனின் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக வருமாறு பிரித்து சம சந்தர்ப்பங்கள் வருமாறு வகுப்புகள் நடைபெறும்.

• பாடசாலை பிரதான மண்டபம், விரிவுரை மண்டபம் போன்றவற்றில் பொருத்தமான மாணவர் இடைவெளி பேணும்வகையில் அதிக மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை நடாத்தலாம். இதே போன்று செமினார்கள் நடாத்தவும் அனுமதி உண்டு.

• மாணவர்கள் முகத்துக்கு முகம் பார்க்காதவாறு வகுப்பறை ஒழுங்கமைப்புகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

• பாடசாலை இடைவேளை நேரத்தை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வராத வண்ணம் ஏற்பாடுகளை மேற்கொள்ளல்.

• மாணவர்கள் உணவுகளை பரிமாறிக் கொள்வதை தவிர்ப்பதை ஆசிரியர்கள் கண்காணித்தல்.

• பாடசாலை இடைவேளைகளிலும் மாணவர்கள் தமது தனிநபர் இடைவெளிகளை பேணல் வேண்டும். முகக்கவசம் அணிதல் வேண்டும்.

• மாணவர்கள் முடியுமானவரை வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருதல்.

• மாணவர்கள் முடியுமானவரை பெற்றோரின் சொந்த வாகனங்களில் வரல்.

• போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் திட்டமிட்டுக் கொள்ளல்.

• பொது போக்குவரத்து பயன்படுத்துபவராயின், அல்லது பாடசாலை போக்குவரத்து வாகனங்களில் வருவதாயின் ஆசன எண்ணிக்கைக்கு அளவாக பயணித்தல். ஏறும் போதும், இறங்கும் போதும் கைகளை செனிடைசர் மூலம் கழுவிக் கொள்ளல். முகத்தை தொடுவதை தவிர்த்தல். வாகன யன்னல்கள் திறந்த நிலையில் பயனித்தல் ஏசி யினை தவிர்த்தல். முகக்கவசம் அணிதல் மற்றும் வாகனத்தில் உணவு உற்கொள்வதை தவிர்த்தல்.

• பாடசாலை கென்டீன்கள் மீள அறிவிக்கும் வரை திறக்கப்பட மாட்டாது.

• பாடசாலை விளையாட்டு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் தொடர்பாக பின்னர் அறிவித்தல்கள் வழங்கப்படும்.

• ஆசிரியர்கள் கோவிட் நிலைமைகளில் இருந்து தம்மையும், மாணவர்களையும் பாதுகாத்துக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளல் வேண்டும்.

• கோவிட் நிலைமை தொடர்பாக மாணவர்களை தைரியப்படுத்தல்.

• கோவிட் தொடர்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வழிகாட்டல்களும் ஆசிரியர்களாலும் பின்பற்றப்படல் வேண்டும்.

• பாடசாலை சுகாதார அபிவிருத்தி வேலைகளுக்கு அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும்.

• மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக அவர்களின் மன தைரியத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

• மாணவர்களின் இடைவெளி இருக்கும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அகற்ற சந்தர்ப்பம் வழங்கல்.

• மாணவர்கள் மேலதிக முகக்கவசங்களை வைத்திருத்தல் வேண்டும்.

• மாணவர்கள் செனிட்டைசர் கொண்டு வரலாம்.

• தொடர்ந்து முகக்கவசம் அணிவதில் சிரமம் கொண்ட மாணவர்கள் face shield பயன்படுத்தலாம்.

• சாப்பிடும்போது முகக்கவசத்தை கழற்றும் சந்தர்ப்பங்களில் அதை வைக்க பிரத்தியேக பையை பயன்படுத்தல். அல்லது ஆடையில் மாட்டிக் கொள்ளல். பொது இடங்களில் வைப்பதை தவிர்த்தல்.

• மாணவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் பாடசாலைக்கு வருவதை தவிர்த்தல்.

• வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு யாதும் ஒரு நபர் உட்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் குறித்த மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பாதிருத்தல்.

• பீ. சீ. ஆர் அல்லது என்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளுமாறு பெற்றோர்களை ஆசிரியர்கள் அறிவுறித்தல்.

பகிர்ந்துகொள்ள