கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிகளுக்கான பாடசாலை வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பாடசாலை 1890ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பாடசாலையை பொறுப்பேற்றதுடன், 1978ல் மூடப்பட்டுவிட்டது.
ஆரம்பத்தில் பாடசாலையை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. அத்துடன் அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது.