பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு!

You are currently viewing பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு!

வட கிழக்கில் தொடர்ச்சியாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்படுவதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

மகா சிவராத்திரி தினத்தில் (08.03.2024) வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரச கட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எண்வர் (08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை, தொல்லியல், வனவள திணைக்களங்கள் மூலம் மேற்கொளளப்பட்டு உள்ளார்.

தமிழ் மக்கள் சொல்லொணாத்துயரை அனுபவிப்பதும் தொடர் கதையாக உள்ளது. எத்தனையோ கண்டன அறிக்கைகள் வெளியிட்டும், கவனயீர்ப்புக்கள் நடைபெற்ற போதும் அவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எவ்விதப் பலனும் இல்லாமல் ஆகிவிட்டது.

இந்நிலையில் அரசிற்கு பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சிங்களப் பொதுசனங்களினதும் சர்வதேச கவனத்தையும் ஈர்த்து இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கொண்டு வர வேண்டிய நிலையிலும் ஜனநாயக ஒத்துழையாமை போராட்ட வடிவங்களில் ஒன்றாகிய பாராளுமன்றை உரிய தீர்வு கிடைக்கும் வரை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் பொது அமைப்புக்கள், மத நிறுவனங்கள், சிவில் சமூகம் சார்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பினராகிய நாம் கோரி நிற்கின்றோம்.

அந்தவகையில் தாங்களும் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இத்தீர்மானத்தினை எடுத்து இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கோரிநிற்கின்றோம் என்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply