சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு 11மணியளவில் நீதிவானின் வாசஸ்தலத்தில் 18 பேரையும் சிறீலங்கா காவற்துறையினர் ஆஜர்படுத்தியபோதே பதில் நீதவான் இந்த உத்தரவையிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேர் நேற்று மதியம் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 17 பேரினையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ், நேற்றிரவு யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறை நிலையத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
தடுப்பில் உள்ளவர்களை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் கைதுக்குரிய காரணம் தொடர்பிலும் விசாரணை மேற்ண்டுள்ளார்.