அண்ணா திலீபா
எங்கண்ணா போனாய்
அண்ணா திலீபா
எங்கண்ணா போனாய்
ஆகுதித் தீ மூட்டி
ஆணிவேராய் நின்றாய்
அடங்கவில்லை உன் பசி
அனல் கொண்டு என்னில்
ஈழம் எரிகிறது என்கின்றேன்
தாகத்தோடு நீ
இருப்பதை மறந்து நான்..
உன் பசி
அடங்காது அண்ணா
உரிமையை
மீட்டெடுக்கும் வரை
தானைத் தலைவன் வழிநடந்தவனே நீயண்ணா
தமிழீழம் பெறும்வரை நீ பசியோடு தானிருப்பாய்..
உன்பசி அறிந்தோரெல்லாம்
உறங்கிக் கிடக்கின்றனர்
ஏனோ உரிமைக்குரல் கொடுக்க முடியாமல்.
விண்ணிலிருந்து உன்
விழியசைவைக் காணுகின்றோம் அண்ணா
வேட்கை கொண்டு நீயும் துடிப்பதை..
பகைவன் சூழ்ந்து
பந்தாடும் ஈழத்தில்
நாய்களும் நரிகளும்
நாட்டியம் கொள்கின்றது
வேலிதாண்டிச் சென்றோரெல்லாம்
விடைதெரியாத் தேசத்தில்
வழிதேடி அலைகின்றோம் நாமிங்கு ஈழத்தில்.
பாரதப் போர் தொடுத்தவனே உன்
பசிப்போர் அடங்கவில்லை
விழிப்போர் இன்றி நாமிங்கு
மரணத்தை வெண்றவர்கள் நீங்கள் அண்ணா மறுபடியும் விதையாய்
முளைத்தெழ வேண்டும்
தமிழீழம் உங்கள் தாகம்
தனியாது அதுவே வீரம்
அண்ணா திலீபா
அடங்காப் பசியோடு நீங்கள்..
உன் உயிர்ப்பசி அடங்கியது அண்ணா
உரிமைக்காண பசியோடு
உணர்வுகள் உள்ளது..
பன்னிரு நாளும்
பசிப்போர் நீ தொடுத்து
பாரதமதில் தீ மூட்டி –
ஈழப்பசியோடு சென்றாய்
உன்னோடு
ஆயிரமாயிரம்
தோழர்கள் ஈழக் கனவோடு
நானும் நம்பிக்கை கொண்டவனாய்.
ஈழவன் தாசன்..
ஈழம்
சென்னை