பாலஸ்தீன துணைமருத்துவர்களை இஸ்ரேல் கொலை செய்தவேளை அந்த படுகொலையிலிருந்து உயிர் தப்பிய ஒருவர் இது தொடர்பில் இஸ்ரேல் தெரிவித்துள்ளவற்றை நிராகரித்துள்ளார்.
எனது சகாக்களிற்கு என்ன நடந்ததுஎன்பதை பார்த்த உயிர்தப்பிய ஒரேயொரு நபர் நான்தான் என முன்தெர் அபெட் கையடக்க தொலைபேசியில் தனது சகாக்களின் படங்களை பார்த்தவாறு தெரிவித்தார்.
மார்ச் 23ம் திகதி அம்புலன்ஸின் முன்பக்கத்திலிருந்த தனது இரண்டு சகாக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அம்புலன்ஸின் பின்பக்கத்தின் ஊடாக நிலத்தில் குதித்து இவர் உயிர்தப்பினார்.
இந்த சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
நாங்கள் அதிகாலையில் எங்களின் தலைமையகத்திலிருந்து வெளியேறினோம் என அவர் காசாவில் பணிபுரியும் பிபிசியின் நம்பகதன்மை மிக்க சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு காயமடைந்தவர்கள் குறித்து தகவல் கிடைத்ததும்பாலஸ்தீன செம்பிறை சங்கத்தினர்சிவில் பாதுகாப்பு அமைப்பினர்இபாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ரவாவில் கூடி அதிகாலையில் புறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“4.40 மணியளவில் முதல் இரண்டு வாகனங்கள் புறப்பட்டு சென்றனஇ4.50 அளவில் இறுதி வாகனம் வந்ததுஇஐந்து மணியளவில் ஐநா அமைப்பின் கார் மீது வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
என இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தில் 9 ஹமாஸ் உறுப்பினர்களும்இபாலஸ்தீன ஜிகாத் அமைப்பின் ஒரு உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எனினும் முன்தெர் இதனை நிராகரித்துள்ளார்.
‘பகலும் இரவும் ஒரே மாதிரியே செயற்படுவோம்இவெளி உள் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்இஇது பாலஸ்தீன செம்பிறை சங்கத்தின் அம்புலன்ஸ் என தெரிவிப்பதற்கான அனைத்து விடயமும் காணப்படும்இவாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெறும் வரை அதன் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.”
‘என்னை இஸ்ரேலிய படையினர் வாகனத்தின் சிதைவுகளிற்குள் இருந்து வெளியே இழுத்தனர்இகண்களை கட்டினர்இ கைதுசெய்தனர்இ15 மணித்தியலாங்கள் விசாரணை செய்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
அம்புலன்சினை ஹமாஸ் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான விடயம்இஅனைவரும் பொது மக்கள் நாங்கள் எந்த குழுவையும் சேர்ந்தவர்கள் இல்லைஇமக்களை பாதுகாப்பதற்காக அம்புலன்ஸ் சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம் வேறு எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.