பிணைக் கைதிகள் உயிருடன் வெளியேறமாட்டார்கள்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை!

You are currently viewing பிணைக் கைதிகள் உயிருடன் வெளியேறமாட்டார்கள்: இஸ்ரேலுக்கு ஹமாஸ் பகிரங்க எச்சரிக்கை!

எங்களின் நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிணை கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்தில் 240 பாலஸ்தீன கைதிகளுக்கு மாற்றாக இதுவரை 80 இஸ்ரேலியர் உட்பட 105 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது.

இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட இருந்த நிலையில் ஹமாஸ் விதிமுறைகளை மீறி விட்டதாக தெரிவித்து போர் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.

இந்நிலையில் ஹமாஸின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பிணைக் கைதிகள் யாரும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஹமாஸ் ஆயுதப் படையின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேடா(Abu Obeida) தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவித்த தகவலில், பிணைக் கைதிகள் பரிமாற்றம், பேச்சுவார்த்தை மற்றும் எதிர்ப்பாளர் கோரிக்கை ஆகியவை நிறைவேற்றப்படாமல், பாசிச எதிரி மற்றும் அதன் திமிரு பிடித்த தலைமை அத்துடன் அதன் ஆதரவாளர்கள் யாரும் பிணைக் கைதிகளை உயிருடன் வெளியேற்றி கொண்டு செல்ல முடியாது என எச்சரித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்றும், ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நம்முடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே எதிரி முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாகவும், தங்களுடைய நிலத்திற்காக புனித போர் தாக்குதலை நடத்தி வருவதாகவும் ஒபேடா தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மத்தியஸ்த நாடான கத்தார் வழங்கிய தகவலில், போர் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆனால் இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு தாக்குதல் பேச்சுவார்த்தைக்கான சாளரத்தை குறைத்து வருகிறது என தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply