பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல்: சிக்கிய கனேடியர்கள் இருவர்!

You are currently viewing பிரதமர் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல்: சிக்கிய கனேடியர்கள் இருவர்!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட முக்கிய அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவர் கைதாகியுள்ளனர். பெடரல் அரசியல்வாதிகளைக் கொல்லப் போவதாக அச்சுறுத்தியதாக குறிப்பிட்டு ஆல்பர்ட்டாவை சேர்ந்த இருவரை தனித்தனி விசாரணைகளில் அடிப்படையில் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவின் INSET அமைப்பு திங்களன்று மதியத்திற்கு மேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மே 10ம் திகதி சமூக ஊடகப் பக்கம் ஒன்றில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட பதிவை பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளதாக தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முடிவில், ஜூன் 6ம் திகதி கல்கரி பகுதியில் வசிக்கும் 23 வயது Mason John Baker என்பவரை அடையாளம் கண்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜூன் 7ம் திகதி, இதுபோன்ற இன்னொரு வழக்கில், பிரதமர் ட்ரூடோ, துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் ஆகியோருக்கு எதிராக சமூக ஊடக பயனர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டு எட்மண்டன் பகுதியில் வசிக்கும் 67 வயது Garry Belzevick என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக INSET அமைப்பு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த கருத்தையும் பதிவு செய்யலாம், தங்கள் செயல்களும் சொற்களும் விளைவுகளை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை பொதுவாக ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அதிகாரி ஒருவர்,

ஆனால் எல்லையை மீறும் போது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். கைதான இருவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமையில் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply