பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது!

You are currently viewing பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது!

இந்தியப் படைகளால் நிகழ்த்தப் பட்ட பிரம்படி படுகொலையின் 36,வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1987,ம் ஆண்டு இதே நாளில் இந்தியப் படைகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி கிராமத்தை சுற்றிவளைத்து அங்கு வாழ்ந்த மக்களை கண்மூடித் தனமாக சுட்டும் யுத்த ராங்கிகளை ஏற்றியும் கொன்று குவித்திருந்தன.

இதில் குழந்தைகள், இளையவர்கள், பெரியோர் என 50,ற்கும் மேற்பட்டோர் கோரமாகப் படுகொலை செய்யப் பட்டிருந்தனர்.

இந்தப் படுகொலையே தமிழர் தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமிப்புச் செய்து நின்ற காலத்தில் இந்தியப் படைகளால் நடாத்தப்பட்ட முதலாவது பாரிய தமிழின அழிப்பு படுகொலையாக பதிவாகியது.

இந்தப் படுகொலை நாள் நினைவு நிகழ்வுகள் இன்று [ 12.10.2023 ]  வியாழக்கிழமை
பிரம்படியில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உறவுகளை இழந்த உறவுகளால் நினைவு கூரப்பட்டது.

இதில் உறவுகளுடன் பிரம்படி சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பொதுமக்கள், மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 1

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 2

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 3

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 4

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 5

பிரம்படி படுகொலையின் நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப் பட்டது! 6

பகிர்ந்துகொள்ள

Leave a Reply