பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் அமேரிக்கா பேச்சு!

You are currently viewing பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கையுடன் அமேரிக்கா பேச்சு!

இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் நல்லாட்சிக்கான தமது அர்ப்பணிப்பை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வெளியிட்ட கருத்தில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ர்.

இலங்கையின் புதிய பாதுகாப்புச் செயலாளரான எயார் வைஸ் மார்சல் சம்பத் துயகோந்தவுடன் இது தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பொன்றை மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் நல்ல நிர்வாகத்திற்கான வலுவான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு பற்றி தாம் இருவரும் விவாதித்ததாக தூதுவர் தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்துவதற்காக, அமெரிக்க – இலங்கை கூட்டுறவை வலுப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடல்சார் கள விழிப்புணர்வை ஆதரிக்கும் வகையில் அண்மையில் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானத்தை மாற்றியதன் மூலம் இந்த கூட்டாண்மை செயல்பட்டதைக் கண்டு பெருமிதம் கொள்வதாக தூதுவர் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply