பிரான்சின் கொரோனா தொற்று நிலவரம்!!

You are currently viewing பிரான்சின் கொரோனா தொற்று நிலவரம்!!

நேற்று ஓகஸ்ட் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பதிவான புதிய கொரோனா தொற்றுக்கள் மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  

24 மணிநேரத்தில் 23,973 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அடிப்படையில் தொற்று வீதம் 3.4% வீதமாக உள்ளது. இதுவரை மொத்தமாக 6,557,356 பேருக்கு பிரான்சில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  976 பேர் 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 10,392 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதேபோல் தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 மணிநேரத்தில் 186 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 2,049 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  127 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். 113,182 பேர் இதுவரை மொத்தமாக கொரோனா வைரசினால் சாவடைந்துள்ளனர். இவர்களில் 86,607 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply