பிரான்சின் கடல்கடந்த மாகாணங்களான மேற்கிந்தியத் தீவுகளான Antilles இல் கடுமையான கொரோனத் தொற்று ஏற்பட்டிருப்பதை பிரான்ஸ் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கப்ரியல் அத்தால் உறுதிப்படுத்தி உள்ளார்.
மார்த்தினிக் தீவில் கொரோனத் தொற்று விகிதமானது, 100.000 பேரிற்கு 1.200 என உச்சமடைந்துள்ளது. அதே நேரம் குவாதிலுப்பில் இது 1.700 ஆக அதிகரித்துள்ளது.
எப்பொழுதும் இல்லாத அளிவிற்கு இந்கு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது.
இங்கு வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவும் நிரம்பி உள்ளது.
மேலதிக தீவிரசிகிச்சைக் கட்டில்களிற்கான, மருத்துவ வசதிகள் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளன எனவும், கப்ரியல் அத்தால் உறுதியளித்துள்ளார்.