கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
இன்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரான்ஸ் கடுமையான கொரோனாத் தொற்றிற்கும், பெரும் உயிரிழப்பிற்கும் ஆளாகி உள்ளது என்று பிரதமர் எட்வார்ட் பிலிப் கூறினார்.
319 பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்2 314 பேர் சாவடைந்துள்ளனர்,அதே போல் கடந்த 24 மணிநேரத்திற்குள்4 611 பேர்க்கு தொற்றியுள்ளது மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 37 511 ஆக உயர்ந்து.4 273 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5,700 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்எனவும், இன்று (28)பிரான்ஸ் அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.