பிரான்சில் எதிர்வரும் மே 11 திகதிவரை உள்ளிருப்பு சட்டம் நீடிக்கப்பட்டுள்து!

You are currently viewing பிரான்சில் எதிர்வரும் மே 11 திகதிவரை உள்ளிருப்பு சட்டம் நீடிக்கப்பட்டுள்து!

உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் எதிர்வரும் மே 11ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று 20 மணி 02 நிமிடத்திற்கு ஆரம்ப்பித்த எமானுவல் மக்ரோனின் உரையின் முக்கிய விடயமாக, மே 11ம் திகதி வரையான உள்ளிருப்புக் கட்டுப்பாட்டு சட்டம் நீட்டிப்புத் தொடர்பாகவும, அதன் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைந்திருந்தது. 

நாங்கள் ஒரு கடினமான தருணத்தில் வாழ்கிறோம், ஆனால் எங்கள் கூட்டு முயற்சிக்கு நன்றி, நாங்கள் முன்னேறி வருகிறோம்,” என்று மக்ரோன் மேலும் கூறினார், தொற்றுநோய் “சீராகத் தொடங்குகிறது”, ஆனால் இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் குறிப்பாக விதிகளைப் பின்பற்றுவதற்கும் நாங்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்” என்று மக்ரோன் கூறினார்.

நேரத்தில் 11 மே தொடக்கம் படிப்படியாக பாடசாலைகள், தொழிற்சாலைகள் இயங்கும் எனவும், யூலை 15 ற்கு பின்னரே உணவகங்கள், திரையரங்குகள் , யாவும் இயங்கும் எனவும் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மக்களிற்கான நிதியாதாரங்கள், பகுதி வேலையிழப்பு ஊதியங்கள், வறியவர்களிற்கான உதவித்தொகைகள், நிறுவனங்களிற்கான சலுகைகள்,உதிவித் தொகைகள் போன்றவை, தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 

பகிர்ந்துகொள்ள