பொபினியில் (Bobigny)வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு வாடகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
பொபினி நகரசபை மற்றும் வீட்டுவசதிக்கான பொது அலுவலகம் இணைந்து இந்த முடிவினை எட்டியுள்ளது. இங்குள்ள குறைந்த கட்டண வாடகை வீடுகளில் வசிக்கும் 4,000 குடும்பங்களுக்கு (ménages qui vivent en HLM ) உதவும் முகமாக, ஏப்ரல் மாதத்துக்கான வாடகை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பொபினியில் வசிக்கும் குறித்த குறைந்த கட்டண வீடுகளில் வசிக்கும் மக்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் வீடுகளில் உள்ளனர். அவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது.