பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 389 சாவடைந்துள்ளனர்!

You are currently viewing பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 389 சாவடைந்துள்ளனர்!

இன்று(24) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 389 சாவடைந்துள்ளனர்! 1

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 305 பேர் ,வயோதிப இல்லங்களில் 84 பேர் ,மொத்தம் 389 சாவடைந்துள்ளனர்.

வைத்தியசாலைகளில் 13.853 பேர்,வயோதிப இல்லங்களில் 8.393 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 22.245 பேர் சாவடைந்துள்ளனர்.

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 389 சாவடைந்துள்ளனர்! 2

மொத்த தொற்று எண்ணிக்கை 122.577 பேர் தொற்றுக்குள்ளாகினர்.

28.658 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,4.870 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

43.493 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொற்றின் வீதம் பிரான்சில் தனது வேகத்தைக் குறைத்துள்ளது. தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அவசரகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

பகிர்ந்துகொள்ள