பிரான்ஸ் – பொன்டி பகுதியில் தமிழ்ப் பெண் ஒருவர் கணவரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் மீசாலை பகுதியை சேர்ந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு குடும்பத் தகராறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஞாயிறு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கடும் காயங்களுடன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
மேலும் குறித்த பெண் யாழ்.பல்கலைக்கழக வர்த்தகத்துறையில் கல்வி கற்ற நிலையில் , கல்வியை இடை நடுவில் கைவிட்டுவிட்டு கடந்த 2006ம் ஆண்டளவில் திருமணம் முடித்து பிரான்ஸ் சென்று கணவருடன் வசித்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.