எனது கணவரும் /எங்களுடை ய பாசமிகு தந்தையுமான பொன்னன் குலசிங்கம் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு கடந்த 24.03.2020 அன்று மரணித்துவிட்டார்.
அவரது இறுதி நிகழ்வுகள் 31.03.2020 செவ்வாய்கிழமையன்று இடம்பெறவுள்ளது.
துர்ரதிஷ்டவசமாக பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச ஒழுங்கு விதிகளின்படி, எல்லோரும் ஒன்று கூடுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது.
என்னுடைய கணவர்/ எங்களுடைய தந்தை, எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி மற்றவர்களுக்கு உதவி புரிந்து வந்தவர்.
எங்களை மீழா துயரில் ஆழ்த்துவது என்னவென்றால், அவரது அன்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அவரது இறுதிநிழ்வில் ஒன்று கூடி,அவரை வழியனுப்பி வைக்க முடியாதுள்ளது தான்.
அவரை அறிந்தவர்கள், அவரது எழிமையையும், அவருடைய அன்பையும் ஆழமாக அறிந்திருப்பர்.
பிரான்சில் தற்போது நடைமுறையிலுள்ள அரச விதிகள் விலக்கப்படும் போது (அரச விதிகளின் அடிப்படையிலான) சுகாதாரப் பிரச்சனைகள் இல்லாத பட்சத்தில் அவரது பிறந்த நாளுக்கு அடுத்த நாளான 12.09.2020 சனிக்கிழமை நாம் ஒரு ஒன்று கூடலை ஏற்பாடு செய்ய எத்தனித்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் நீங்கள் எங்களுடன் பகிர்ந்துகொண்ட இரங்கல் தகவல்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் எனவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பிரான்சில் 5 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். பலர் இத்தகவலை வெளியிடுவதற்கு அச்சமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(நன்எறி ரிமலையின்)