பிரான்சில் ஏற்கனவே ஏழு மருத்துவர்கள் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ள நிலையில், மேலும் இரண்டு வைத்தியர்கள் சாவடைந்துள்ளானர். இத்துடன் சாவடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
செவ்ரோன் மற்றும் ஓல்னே-சூ-புவாவில் (Seine-Saint-Denis) அமைந்துள்ள Robert-Ballanger வைத்தியசாலையில், 65 வயதுடைய பொது மருத்துவரான Kabkéo Souvanlasy சாவடைந்துள்ளார். இவர் கடமையில் இருந்த நேரம், கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி, கடந்த ஒரு மாதகாலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Hauts-de-France இலுள்ள Villers-Outréaux இல் கடமையாற்றிய 64 வயதுடைய Philippe Lerche எனும் பொது மருத்துவர் கொரோனாத் தொற்றினால் சாவடைந்துள்ளார்.

உள்ளார். இதனை இப் பிராந்திய சுகாதார நிறுவனம் (ARS)அறிவித்துள்ளது.
வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்!
தமிழ்மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
