Mulhouse நகரைச் சேர்ந்த குறித்த மருத்துவர் Dr. Abdelmajid Ben Aicha என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் இரத்தச் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 62 வயதுடைய அவர் இன்று சாவடைந்துள்ளார்.
இதுவரை 10 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியர்கள் தாதிகள் சுகாதார பணியாளர்கள் தியாகங்களைப் போற்றுவோம்.
இவருடைய இழப்பினால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.