பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் (நந்தியார் (nanterre), கொலம்பஸ்(colombes), சேர்ஜி(Cergy)) ஆசிரியை இராசநாயகம் உதயமாலா (உதயா – வயது 52) அவர்கள் நேற்று (05.06.2020) வெள்ளிக்கிழமை சாவடைந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர் தாயகத்தில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்
பிரான்சு Saint-Germain-en-Laye இனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இவர், மிகுந்த தேசவிடுதலைப்பற்றுக் கொண்டவர், பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பில் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

எமது தேசிய விளையாட்டுப்போடடிகளில் , தேசிய நிகழ்வுகளில் அறிவிப்பாளராகவும் கடமையாற்றியவர். தமது பிள்ளைகளையும் அதன்பால் இணையவைத்து பங்கொள்ளச்செய்தவர். சிறந்த கலைஞரும், நாடக ஆக்கம், பட்டிமன்றம் போன்றவற்றிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர்களுக்கு அனைத்து தமிழ்ச்சோலைகள் சார்பாகவும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
(எரிமலை செய்திப் பிரிவு )