கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான புதிய தொற்றுக்கள் மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 25,077 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. PCR அடிப்படையில் தொற்று 4.2% வீதமாக உள்ளது. இதுவரை 6.258.953 பேருக்கு பிரான்சில் தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை நிலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. வியாழக்கிழமை 8210 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை மாலை 8.368 பேராக அதிகரித்துள்ளது. பலர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிக்கொண்டுள்ள போதும், மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 1458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரங்களில் 165 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
60 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 112,190 ஆக அதிகரித்துள்ளது.