கொரோனாவினால் பாடசாலைகள் நிறுத்தப்பட்டதிலிருந்து, வீட்டில் நிற்கும் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான எடுக்கப்பட்ட வேலை விடுப்பில் நிற்பவர்கள், மே மாதம் முதலாம் திகதியிலிருந்து பகுதி வேலையிழப்பில் இணைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைப் பராமரிப்பு விடுப்பில் நிற்பவர்களிற்கு, sécurité sociale வழங்கும் இழப்பீட்டின் மிகுதியை, பெரும்பாலும் அவர்கள் பணிபுரியும் நிறுவனம் வழங்கி வந்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்குப் பின்னர் இவர்களின் இழப்பீட்டு ஊதியம் குறைவடைய உள்ளது. இந்தப் பகுதி வேலையிழப்பில் ஒரு மாதச் சம்பளத்தின் கழிவுகளிற்குப் பின்னரான (net) தொகையின் 84% இழப்பீடான வழங்கப்படும். ஆனால் sécurité sociale இன் இழப்பீட்டில் நிற்பர்களிற்கு 30 நாட்களின் பின்னர் 66% ஊதியத் தொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்படும். இதை விட பகுதி வேலையிழப்பு இழப்பீடு இலாபகரமானது இந்தப் பகுதி வேலையிழப்பான chômage partiel இல் பிரான்சில் தற்போது, ஒன்பது மில்லியன் பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்.