இல்-து-பிரான்சுக்குள் மற்றுமொரு தற்காலிக பிணவறை ஒன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இல்-து- பிரான்சுக்குள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
சடலங்களை பாதுகாக்கவும், இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளவும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, Wissous (Essonne) நகரில் இந்த பிணவறை திறக்கப்பட உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் திறக்கப்பட உள்ள இந்த பிணவறைக்கு, நாளை சனிக்கிழமை முதலாவது சடலம் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் இறுதிச்சடங்கை மேற்கொள்பவர்கள், மத குருமார்கள் அல்லது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இங்கு அனுமதிப்பது தொடர்பாக எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரான்சின் மிகப்பெரிய சந்தையான சர்வதேச சந்தையையை தற்காலிகமாக பிணவறையாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.