பிரான்சில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவுநாள் உணர்வுபூர்வமாக அனுசரிப்பு
பாரிஸ், மே 18 – தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தில் சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்பில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் தமிழின அழிப்பு நினைவுநாள் இன்று மே 18, 2025, பிரான்சின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, சர்வதேச அளவில் தமிழர்களுக்கு நேர்ந்த நியாயமற்ற பேரழிவை உலகிற்கு நினைவுபடுத்தும் முயற்சியாகவும், எதிர்காலத்தில் அதுபோன்ற ஒன்றும் நிகழக்கூடாது என்ற வலியுறுத்தலாகவும் அமைந்துள்ளது.

