கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் கொரொனாத் தொற்றினால் மீண்டும் 74 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 114.157 ஆக உயர்ந்துள்ளது. இதில் வைத்தியசாலைகளில் 87.512 பேரும் முதியோர் சமூக இல்லங்களில் 26.505 பேரும் சாவடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்திற்குள் 17.590 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் கொரானாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.728.858 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளிலும் அன்றாடம் கொரோனாத் தொற்று நோயாளிகள் பெருமளவில் அனுமதிக்கப்பட்டு, தற்போது 11.052 நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.தீவிரசிகிச்சைப் பிரிவில் 2.259 பேர் உயிராபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் மேற்கண்ட தகவல்களை வழங்கி உள்ளது.