பிரான்சில் ரஸ்ய துணைதூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

You are currently viewing பிரான்சில் ரஸ்ய துணைதூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
பிரான்சின் மார்சேய் நகரத்தில் உள்ள ரஸ்ய துணை தூதரகத்தின் இனந்தெரியாதவர்கள் பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

 

துணைதூதரக கட்டிடத்தின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக பிரான்ஸ்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை என ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேதங்கள் அல்லது காயங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகாத அதேவேளை அந்த பகுதியை சுற்றிவளைத்து போக்குவரத்தை தடைசெய்துள்ள பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது பயங்கரவாத தாக்குதல் போல தோன்றுவதாக தெரிவித்துள்ள ரஸ்யா முழுமையான விசாரணையை கோரியுள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து இன்றுடன் மூன்று வருடங்களாகின்றமை  குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply