பிரான்சில் விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்!

You are currently viewing பிரான்சில் விழுந்து நொறுங்கிய சுற்றுலாப் பயணிகள் விமானம்!

பிரான்ஸில் சுற்றுலா பயணிகள் சென்ற சிறிய விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் ஞாயிற்றுக்கிழமை மதியம், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 3 சுற்றுலா பயணிகள் வரை உயிரிழந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்து பிரான்சின் கொல்லேஜியன் (Collegien) என்ற நகரத்திற்கு அருகில் உள்ள A4 நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

மேலும், விமானம் மின்சார கம்பியில் மோதியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமான விபத்து காரணமாக நெடுஞ்சாலை இரு திசைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, அதே சமயம் வாகனங்களும் விபத்தில் சிக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் நெடுஞ்சாலையின் நடுப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானம் சிதைந்த நிலையில் கிடப்பதை காட்டுகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments