இன்று(06) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 177 பேர் ,வயோதிப இல்லங்களில் 101 பேர் ,மொத்தம் 278 சாவடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் 16.237 பேர்,வயோதிப இல்லங்களில் 9.572 பேர் சாவடைந்துள்ளனர் .
மொத்தமாக பிரான்சில் 25.809 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 4.183 பேர் தொற்றுக்குள்ளாகினர்.
மொத்த தொற்று எண்ணிக்கை 137.150 பேர் தொற்றுக்குள்ளாகினர்.
23.983 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,3.147 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
53.972 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அவசரகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.

