பிரான்சில் கொரோனா கொல்லுயிரியால் நரபலி எடுக்கப்பட்டோரில் குறைந்தது 5 பேர் தமிழர்கள் என சங்கதி-24 இணையம் அறிகின்றது.
இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொல்லுயிரித் தொற்றுப் பரவலாம் என்பதால், அவர்களின் உடல்களைப் பொறுப்பேற்று ஈமக் கிரியைகளை உறவினர்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது இவ்விதம் இருக்க சட்டபூர்வ வதிவிட அனுமதியின்றி பிரான்சில் தங்கியிருக்கும் கொரோனா கொல்லுயிரியால் நோய் வாய்ப்பட்டிருக்கும் தமிழர்களை, மருத்துவமனைகளுக்கு செல்ல விடாது அவர்களது வீட்டு உரிமையாளர்கள் தடுத்து வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் குறித்த வீடுகளில் தங்கியிருக்கும் கொரோனா கொல்லுயிரியால் பாதிக்கப்பட்டோர் உரிய மருத்துவ சிகிச்சைகள் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.