இன்று(21) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 387 பேர் ,வயோதிப இல்லங்களில் 114 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்தியசாலைகளில் 12.900 பேர்,வயோதிப இல்லங்களில் 7.809 பேர் சாவடைந்துள்ளனர் .
மொத்தமாக பிரான்சில் 20.796 பேர் சாவடைந்துள்ளனர்.
மொத்த தொற்று எண்ணிக்கை 117.304 பேர் தொற்றுக்கள் அடையாளம்.
30.106 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,5.443 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
37.181 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றாலும், தொற்றின் வீதம் பிரான்சில் தனது வேகத்தைக் குறைத்துள்ளது. தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அவசரகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.