இன்று(27) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் அவர்களின் தினசரி அறிக்கை
கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் 65 பேர் சாவடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகளில் 18.260 பேர்சாவடைந்துள்ளனர் ,வயோதிப இல்லங்களின் சாவு எண்ணிக்கைள் எதிர்வரும் 29ம் திகதி வெள்ளிக்கிழமையே அறிவிக்கபடும் எனச் சுகாதார தலைமைகம் தெரிவித்துள்ளது இன்று முதியோர் இல்லச் சாவுகள் இணைக்கப்படவில்லை
மொத்தமாக பிரான்சில் 28.596 பேர் சாவடைந்துள்ளனர்.
15.680 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,1.501 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
66.584 பேர் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், அவசரகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.