பிரான்சில் SEVRAN நகரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று காலை மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வோடு இடம்பெற்றிருந்து. மாநகரசபை முதல்வர் திருவாளர் ஷ்ரீபன் புலோஞ் அவர்களும் கலந்து கொண்டு தன் வணக்கத்தை தெரிவித்தார். எம் உறவுகளுக்காக. இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் சுமார் 50 பேர் வரையில் தமது வணக்கத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தமிழின அழிப்பு நிழற்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.








