பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் பிரெஞ்சு அரசின் (கோவிட் 19) சட்டதிட்டங்களுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று 18.05.2020 திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் ஈழவீரன் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.
சமநேரத்தில் பிரான்சின் ஏனைய அனுமதிவழங்கப்பட்ட மாநகர சபைகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.








(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு )