பிரான்சு லாச்சப்பல் பகுதியில் இன்று 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை சுமந்திரனின் கொடும்பாவி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியத் துரோகி, சிங்களக் கைக்கூலி சுமந்திரனுக்குத் தமிழர்களாகிய நாம் எமது தார்மீகக் கோபத்தை வெளிப்படுத்துவோம். என்று எழுதப்பட்ட பதாகையும் சுமந்திரனின் கொடும்பாவி மீது வைக்கப்பட்டிருந்தது.
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றின் நேர்காணலில் சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு யாழ் நல்லூரில் செருப்பு மாலை போடப்பட்டும் தமிழகத்தில் செருப்படி வாங்கியதும் தெரிந்ததே.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சுமந்திரனுக்கு எதிராகக் குரல் எழுப்பி வரும் நிலையில், பிரான்சு லாச்சப்பலில் சுமந்திரனின் இந்தக் கொடும்பாவி வைக்கப்பட்டுள்ளது.



(எரிமலையின் செய்திப் பிரிவு)