பிரான்ஸில் தங்கியுள்ள அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக வதிவிட அனுமதிப் பாத்திரங்களின் பாவனைக்காலம் மேலும் நீடிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் இதற்கான அனுமதியை நேற்று வழங்கியிருக்கிறது.
பாவனைக்காலம் மே 16 முதல் ஜூன் 15 வரையான காலப்பகுதிக்குள் நிறைவடைகின்ற வெளிநாட்டவர்களுக்கான வதிவிட அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் அடுத்துவரும் ஆறு மாத காலத்துக்கும்-
அடைக்கலம் கோரியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் தற்காலிக அனுமதி அடுத்துவரும் மூன்று மாத காலப்பகுதிக்கும் தொடர்ந்து செல்லுபடியாகும் வகையில் இந்த நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான தற்காலிக வதிவிட அட்டை (titres de séjour des étranger) அடைக்கலம் கோரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக அனுமதி (certificats de demande d’asile) ஆகியனவே நீடிக்கப்படுகின்றன.
மார்ச் மாதம் வரை உதவிப்பணம்(l’allocation aux demandeurs d’asile – ADA), பெறுவதற்கு உரித்துடையோராக இருந்த தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு அதனை மே மாதம் வரை நீடித்து வழங்குவதற்கும் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இரண்டு மாதகால பொதுமுடக்கத்தைக் கவனத்தில் கொண்டே உறுப்பினர்கள் இந்த நீடிப்புகளுக்கு ஆதரவாக வாக்களித்து ள்ளனர்.
15-05-2020 (குமாரதாஸன்)