பிரான்ஸில் வழங்கப்பட்டிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது. வழங்கப்பட்ட தகவல்களுக்கமைய, 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326 பேர் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.
அதன்படி நேற்று 27 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்த்து பிரான்சில் கொரோனா தொற்றினால் 165.267 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனாத் தொற்றினால் 13.281 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 760 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரான்சின் கொரோனாத் தொற்று விகிதம் 54.34 ஆக உள்ளது. இது எச்சரிக்கை நிலையயை எட்டி உள்ளது.