பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் அலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான ஒருவரையே சபாநாயகராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில், சபாநாயகரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, பிரதமர் தேர்வில் அவர் முக்கியப் பங்காற்றுவார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நேற்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தேர்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தினார்கள். மூன்று சுற்றுகளாக நேர்மையாக நடந்த வாக்கெடுப்பின் முடிவில், மேக்ரான் ஆதரவாளரான Yaël Braun-Pivet என்பவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்