சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் வென்னப்புவவில் இருந்து படகு மூலம் பிரான்ஸ் செல்ல முயற்சித்துள்ளார்கள். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கையர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.