பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெடித்த பாரிய போராட்டம் !

You are currently viewing பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெடித்த பாரிய போராட்டம் !

பிரான்ஸ்(France) தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் படி ஆளும் கட்சிக்கு எதிராக வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததுமே, ஜனாதிபதியின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அவர்கள் கணித்ததுபோலவே, தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன. எதிர்பார்த்ததுபோலவே, வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அத்துடன், மேக்ரான் கட்சிக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை, மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ளது.இந்நிலையில், வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும், தீவைப்பு சம்பவங்களுமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க, பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

காரணம் யாதெனில், பிரான்சில் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் இரண்டாவது கட்ட போட்டி நடைபெறும்.

இதனால் மேக்ரான் கட்சி போட்டியிட வாய்ப்பில்லை. ஆகவே, சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை பதவி விலகச் செய்து, அதன் மூலம் வலதுசாரியினரை வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்க, திட்டங்கள் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments