பிரான்ஸ் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை!

You are currently viewing பிரான்ஸ் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை!

பிரான்ஸில் உள்ள அரசு பள்ளிகளில் இனி முஸ்லிம் பெண் பிள்ளைகள் அபாயா(ஹிஜாப்) அணிய தடை விதிப்பதாக அந்த நாட்டின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அரசு பள்ளிகளில் இனி பெண் குழந்தைகள் முழுநீள அபாயா(ஹிஜாப்) அணிந்து வர தடை விதிப்பதாக ஞாயிற்றுக்கிழமை கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொலைக்காட்சி சேனல் TF1 க்கு அவர் அளித்த பேட்டியில், “பள்ளிகளில் இனி குழந்தைகள் அபாயா(ஹிஜாப்) அணிந்து வர முடியாது என்பதை நான் முடிவு செய்துள்ளேன்”.

“நீங்கள் பொதுவாக வகுப்பறைகளுக்குள் செல்லும் எந்தவொரு மாணவரின் மதத்தையும் உங்களால் பார்வையால் அறிய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை பொது கல்வியில் இருந்து 19ம் நூற்றாண்டு சட்டம் நீக்கிய பிறகு, அரசு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு பிரான்ஸ் அரசு தடையை அமுல்படுத்தி வருகிறது.

அதே சமயம் நாட்டில் வளர்ந்து வரும் சிறுபான்மையினர் முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதலை புதுப்பிக்க பிரான்ஸ் அரசு போராடி வருகிறது.

கடந்த 2004ம் ஆண்டு பள்ளிகளில் முக்காடு அணிந்து வருவதற்கு தடை விதித்தது, பிறகு 2010ம் ஆண்டு பொது இடத்தில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதற்கு தடை விதித்தது. இது 5 மில்லியன் முஸ்லிம் மக்களில் சிலரை கோபமடைய வைத்தது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply