பிரான்ஸ், பிரித்தானியாவை ஒரே நாளில் அழிக்கும் திட்டத்தில் ரஷ்யா!

You are currently viewing பிரான்ஸ், பிரித்தானியாவை ஒரே நாளில் அழிக்கும் திட்டத்தில் ரஷ்யா!

மூன்றாம் உலகப் போர் வெடித்தால் ஒரே நாளில் ரஷ்யா பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை அழித்துவிடும் என ரஷ்ய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். சில மாதங்களுக்கு முன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணிக்கு ‘மூன்றாம் உலகப் போர்’ எச்சரிக்கையை விடுத்தது தெரிந்ததே.

இந்நிலையில், உலகளாவிய மோதல் வெடித்தால், ரஷ்யாவால் பிரித்தானியா மற்றும் பிரான்சை ஒரு நாளுக்குள் முடக்க முடியும் என்று ரஷ்ய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான புடினின் போர் மூன்றாம் உலகப் போராக மாறினால், பிரித்தானியா மற்றும் பிரான்சின் அணுசக்தி ஆற்றல்களை ஒரே நாளில் அகற்றிவிடுவார் என்று ரஷ்ய ராணுவ நிபுணர் டாக்டர் யூரி பரஞ்சிக் கூறினார்.

ஒரு நாளுக்குள், ரஷ்யா ‘Operation Unthinkable’-ஐ செய்து இரு வல்லரசு நாடுகளின் அணுசக்தி ஆற்றல்களை ரஷ்யா அகற்றிவிடும் என்று பரஞ்சிக் கூறியுள்ளார்.

விளாடிமிர் புடினின் ஆட்சி அணுசக்தி முகாம்களில் அதிக முதலீடு செய்கிறது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் எங்கும் முடிவுக்கு வராத நிலையில், விளாடிமிர் புடின் ஆட்சி மொபைல் அணுசக்தி தங்குமிடங்களை கட்டுவதற்காக முக்கிய நகரங்களில் 330,000 Pounds முதலீடு செய்வதாக கூறப்படுகிறது. இந்த தங்குமிடங்கள் ஒரு பேரழிவு போரின் போது தஞ்சம் அடைய உதவும்.

விளாடிமிர் புடினின் Operation Unthinkable இரண்டு நோக்கங்களை அடைய உதவும் என்று டாக்டர் பரஞ்சிக் கூறினார். முதலாவது ஐரோப்பாவின் இராணுவ புவிசார் அரசியல் அந்தஸ்தை பறிப்பதாகும். அடுத்து, அணு சக்திகளின் எண்ணிக்கையை ஒன்பதிலிருந்து ஏழாக குறைக்கும்.

இவ்வாறு, மூன்றாம் உலகப் போர் வெளிப்பட்டால் ரஷ்யாவின் தந்திரோபாயங்களை கோடிட்டுக் காட்டினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply