பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க நாளில் பிரான்ஸ் ரயில் பாதைகளுக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதன் பின்னணியில் ரஷ்யாவாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ரஷ்ய நாசவேலை குறித்த கவலைகளுக்கு காரணமாக கூறப்படுவது, பாரீஸ் நகரில் சில தினங்களுக்கு முன்னர் ரஷ்ய உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர்.
ரஷ்ய உளவாளி என கருதப்படும் Kirill Gryaznov என்பவர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிரான்ஸ் ரயில் பாதைகளுக்கு நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம், உண்மையில் நாசவேலையாக இருக்கலாம் என்றே உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், பாதுகாப்பு நிபுணர் ஒருவர் குறிப்பிடுகையில், நடத்தப்பட்ட தாக்குதலானது ரஷ்ய பாணியில் அமைந்துள்ளது என்றார். உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் என்பது ரஷ்யா மற்றும் அதன் உளவாளிகள் பொதுவாக முன்னெடுக்கும் ஒரு செயல்முறை என்றார் அந்த நிபுணர்.
ஆனால் இதுபோன்ற செயல்களில் வேறு நாடுகள் அல்லது குழுக்கள் ஈடுபடுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரீஸ் நகரில் ஒருவர் கைதாகியுள்ளார், துரதிர்ஷ்டவசமாக அவர் ரஷ்ய உள்ளூர் உளவு அமைப்புக்கு தொடர்புடையவர் என அந்த நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் ரயில் போக்குவரத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க செய்யும் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட உத்தி இந்த நெருப்பு வைக்கும் தாக்குதல் என்றார். பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளை குறிவைக்கும் ஒரே நாடு ரஷ்யா மட்டுமல்ல, தொடர்புடைய தாக்குதலை ஈரான் முன்னெடுக்க வாய்ப்பிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Israeli Katz இதை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளதுடன், ஈரான் தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும் பிரான்சுக்கும் மோதல் போக்கு நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.